மேலும் செய்திகள்
ஊதிய முரண்பாடை களைய ஆசிரியர்கள் வலியுறுத்தல்
13-Oct-2025
கரூர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கறுப்பு பட்டை அணிந்து போராட்டம் அறிவித்தனர். அதன்படி கரூர் மாவட்டத்தில், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கறுப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். அதில், சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை தொடர வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அளவில், 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கறுப்பு பட்டை அணிந்து பள்ளி சென்றனர்.
13-Oct-2025