உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஊதியம் வழங்க கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதியம் வழங்க கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: அனைத்து வளமைய ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமரன் தலைமை வகித்தார். நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் ராமு பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் அனைத்து வளமைய ஆசிரியர்க-ளுக்கும் செப்., மாத ஊதியத்திற்கான நிதி மத்திய அரசால் ஒதுக்-கப்படவில்லை என, கூறப்படுகிறது.இவர்களுக்கு, கடந்த, 2002ம் ஆண்டிலிருந்து, ஐந்தாண்டு திட்-டத்தின் கீழ், 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் ஊதியத்திற்கான நிதியை வழங்குகிறது. மாவட்ட வாரி-யாக ஆசிரியர்களுக்கு, வளமைய ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிப்பதற்காக இவர்கள் அனைவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில், 80 ஆசிரியர்கள் இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர்.மேலும், அலுவலக உதவியாளர்கள், இயன்முறை மருத்துவர்கள், கணினி விவர பதிவாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், அனைத்து வகை தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்கங்-களின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி