பத்து ரூபாய் இயக்கம் மாநில உயர்நிலை கூட்டம்
கொல்லிமலை: தமிழகம் முழுவதும், தகவல் அறியும் உரிமை சட்டத்தை பொது-மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில், பத்து ரூபாய் இயக்கம் செயல்பட்டு வரு-கிறது.இதன் மாநில உயர்நிலைக்குழு கூட்டம் கொல்லிமலையில், நவ., 29ல் தொடங்கியது. 3 நாட்கள் நடந்த இந்த கூட்டத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. மாநில பொதுச்செய-லாளர் விஸ்வராஜூ சிறப்புரையாற்றினார். துணை பொதுச்செய-லாளர்கள் சீனிவாசன், டேவிட்குமார், கண்ணன், மாவட்ட செய-லாளர் ரமேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஆலோசனை கூட்டத்தில், உறுப்பினர்களை அதிகப்படுத்துவது, நிர்வாகிகளுக்கான பயிற்சி, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை உரிமை குறித்து பேசினர்.