உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் 39வது விளையாட்டு விழா

கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் 39வது விளையாட்டு விழா

நாமக்கல், டிச. 21--நாமக்கல் அடுத்த, வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவம், உடல்நல மேம்பாடு, மனநல மேம்பாடு மற்றும் இலக்கு நோக்கிய தன்னார்வத் துாண்டுதலை மேம்படுத்தும் வகையில், 39வது விளையாட்டு விழா நடந்தது.விழாவில், சிறப்பாளராக பங்கேற்ற நாமக்கல் மாவட்ட கூடுதல் எஸ்.பி., சண்முகம், மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அப்போது, விளையாட்டின் தனித்துவம், கல்வி, வேலைவாய்ப்பில் விளையாட்டின் பங்கு குறித்து பேசினார். தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், பதக்கங்களை வழங்கினார். தொடர் ஓட்டம், சிலம்பம், கராத்தே, துப்பாக்கி சுடுதல் போன்ற பல்வேறு போட்டிகளையும் துவக்கி வைத்தார்.கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜா, தாளாளர் ராஜன், பள்ளி ஆலோசகர் ராஜேந்திரன், செயலாளர் சிங்காரவேலு, இயக்குனர் ராஜராஜன், மெட்ரிக் பள்ளி முதல்வர் சாரதா, மத்திய பள்ளியின் மூத்த முதல்வர் யசோதா, முதல்வர் காயத்ரி, கல்வியியல் கல்லுாரி முதல்வர் சாந்தி, ஆசிரியர்கள், மாணவ,- மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை