உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அக்னி மாரியம்மன் கோவிலில் காப்பு கட்டி திருவிழா தொடக்கம்

அக்னி மாரியம்மன் கோவிலில் காப்பு கட்டி திருவிழா தொடக்கம்

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, நன்செய் இடையாறில் பிரசித்தி பெற்ற அக்னி மாரியம்மன் கோவில் உள்ளது.ஆண்டுதோறும் மார்ச் மாதம் திருவிழா நடப்பது வழக்கம். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு மாரியம்மன் கோவில் முன் கம்பம் ஊன்றி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. வரும், 17ல் மறு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 23ல் வடிசோறு படைத்தலும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, 24ல் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 25ல் கிடாவெட்டு, மாவிளக்கு பூஜையும், 26ல் மஞ்சள் நீராடலுடன் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தாக்கள் மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !