மேலும் செய்திகள்
'டாஸ்மாக் 'ஊழியரை தாக்கியவர்கள் கைது
01-Apr-2025
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, பொது சுவர் தகராறில், சமரசம் பேசியவரின் கழுத்தை அறுத்துக் கொன்ற போதை வாலிபர் தப்பினார்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பிள்ளாசெட்டித் தெருவைச் சேர்ந்த தறித்தொழிலாளி சுந்தரராஜன், 35. இவரது வீடு அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன், 50. இருவருக்கும் இடையே பொது சுவர் தொடர்பாக பிரச்னை இருந்தது.சவுண்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன், 42, என்பவர், இருவரிடமும் சமரசமாக செல்ல அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் கார்த்திகேயன், இரவு 10:00 மணிக்கு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். எதிரே போதையில் வந்த சுந்தரராஜன், திடீரென கார்த்திகேயன் மார்பில் கத்தியால் குத்தினார்.ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்துவிட்டு, சுந்தரராஜன் தப்பினார். பேளுக்குறிச்சி போலீசார் தலைமறைவாக உள்ள சுந்தரராஜனை தேடுகின்றனர்.
01-Apr-2025