உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சபை மாறி வந்து வி.சி., நிர்வாகி சவுண்ட் பி.ஏ.பி., பாசன சபை கூட்டத்தில் சலசலப்பு

சபை மாறி வந்து வி.சி., நிர்வாகி சவுண்ட் பி.ஏ.பி., பாசன சபை கூட்டத்தில் சலசலப்பு

தாராபுரம், பி.ஏ.பி., பாசன சபை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கண்காணிப்பு குழு கூட்டம், தாராபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. சங்க நிர்வாகிகள் அந்தந்த பகுதி விஷயங்கள் குறித்து பேசினர். இதற்கு பாசன சபை தலைவர் மற்றும் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா உள்ளிட்டோர் பதில் அளித்தனர். அப்போது வி.சி., உப்பாறு பாசன பகுதி விவசாயிகள் பிரிவு நிர்வாகி சிவகுமார், கையில் சில காகிதங்களை வைத்துக்கொண்டு பல்வேறு குற்றச்சாட்டு வாசித்தார். அப்போது குறுக்கிட்ட ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா, இந்த கூட்டத்தில் இந்த விஷயங்கள் தெரிவிக்கப்பட வேண்டியதில்லை என்றார். பாசன சபை நிர்வாகிகளும் தேவையில்லாத விஷயங்களை கூறி குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என்றனர். ஆனாலும் கேட்க மறுத்து ஆர்.டி.ஓ., முன் கால் மீது கால் போட்டு சிவகுமார், பதிலுக்கு பதில் பேசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாசன சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், சிவக்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். இதனால் எழுந்து நின்று சிவக்குமார், பதில் வாக்குவாதம் செய்தார். அப்போது குறுக்கிட்ட ஆர்.டி.ஓ.,, இந்தக் கூட்டத்திற்கு உங்களுக்கு அழைப்பு கடிதமே அனுப்பவில்லை. நீங்கள் எப்படி வரலாம் என்று கூறி, போலீசாரை அழைத்து சிவக்குமாரை அமர செய்தார். இதை தொடர்ந்தும் சிறிது நேரம் கூட்டம் தொடர்ந்தாலும், சலசலப்பு நீடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ