பொம்மசமுத்திரம் ஏரி பகுதியில் தொடர் வழிப்பறி நடப்பதாக புகார்
பொம்மசமுத்திரம் ஏரி பகுதியில்தொடர் வழிப்பறி நடப்பதாக புகார்சேந்தமங்கலம், அக். 12-பொம்மசமுத்திரம் ஏரி பகுதியில் இரவு நேரங்களில் தொடர் வழிப்பறி சம்பவம் நடப்பதால், போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சேந்தமங்கலம் டவுன் பஞ்., காந்திபுரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து கொல்லிமலை அடிவாரம், காரவள்ளிக்கு செல்லும் சாலையில் பொம்மசமுத்திரம் ஏரி உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரி, தற்போது வறண்டு காணப்படுகிறது. ஏரி, சாலையோரமாக உள்ளதால், வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் என்ற அச்சத்தில், வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையை பயன்படுத்தி, வழிப்பறி கொள்ளையர்கள் இரவில் இந்த வழியாக செல்வோரை மறித்து, பண பறிப்பில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த மக்கள், சேந்தமங்கலம் போலீசில் புகாரளித்துள்ளனர். ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இரவு நேரங்களில் பொம்மசமுத்திரம் ஏரி வழியாக செல்வோரிடம் வழிப்பறி சம்பவம் நடந்து வருகிறது. இதனால், இரவில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.