உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கெடமலையில் பாறைகள் உருண்டதால் பரபரப்பு

கெடமலையில் பாறைகள் உருண்டதால் பரபரப்பு

நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் அடுத்த போதமலையில் கீழூர், மேலுார், கெடமலை என, மூன்று மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு, 1,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்காக சில மாதங்களுக்கு முன், சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ராசிபுரம் அதன் சுற்று வட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிது. போதமலையிலும் மழை பெய்து வருவதால், மலையில் இருந்து வரும் ஓடைகளில் நீர்வரத்து தொடங்கியுள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் கெடமலையில் இருந்து, 2 டன் எடையுள்ள இரண்டு பாறைகள், 800 அடி உயரத்தில் இருந்து உருண்டு வந்து புதுப்பட்டி பகுதியில் உள்ள மலையடிவார பகுதியில் விழுந்துள்ளன. கற்கள் உருண்டு வந்ததால் அடிவார விவசாயிகள் சென்று பார்த்துள்ளனர். தொடர் மழை காரணமாக கெடமலையில் வனப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு இரண்டு பாறைகளும் உருண்டு வந்தது தெரிந்தது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி