உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருச்செங்கோடு விவேகானந்தா வித்யாபவன் மாணவி முதலிடம்

திருச்செங்கோடு விவேகானந்தா வித்யாபவன் மாணவி முதலிடம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு விவேகானந்தா வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நேஹா, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 500க்கு, 493 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். இந்த மாணவி, கணிதம், அறிவியல் பாடத்தில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இதேபோல், மாணவி நந்திதா, 481 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம்; மாணவி தக்ஷினா, 475 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர்.பிளஸ் 1 தேர்வில், மாணவி வந்தனா, 600க்கு 570 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். மாணவி தர்ஷினி, இரண்டாம் இடம்; மாணவி ரிஷா ஸ்ரீநிதி, மூன்றாம் இடம் பிடித்தனர். ரிஷா ஸ்ரீநிதி, கணினி அறிவியல் பாடத்தில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளார். இக்கல்வியாண்டில் மாணவ, மாணவியர், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அதிக மதிப்பெண் பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியரை, விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் கருணாநிதி, இணை செயலாளர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், செயல் இயக்குனர் சொக்கலிங்கம், பள்ளி முதல்வர் வைகுண்ட ரத்தினம் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ