திருஞானசம்பந்தர் குரு பூஜை
வெண்ணந்துார், வெண்ணந்துார், செல்வ விநாயகர் ஆலயத்தில், 63 நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தர் குருபூஜை விழா நேற்று நடந்தது. திருஞானசம்பந்தருக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வெண்ணந்துார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று, திருஞானசம்பந்தரை வணங்கி சென்றனர். வருகை புரிந்த பக்தர்கள் அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது.