திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி கூட்டம்
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி மையத்தின், பேராசிரியர்கள், அமைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம், ஆயிர வைசிய திருமண மண்டபத்தில் நடந்-தது. திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தின், 24வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பர-மாச்சாரிய சுவாமிகள் தலைமை வகித்தார். தமிழகம் மட்டுமின்றி கேரளம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், நுாற்றுக்கணக்கான பேராசிரியர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சித்தாந்த வகுப்பு நடத்தும் முறைகள் குறித்து ஆலோசனை தெரிவித்தனர். திருச்செங்கோடு அருள்நெறி வார வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்