உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் /  முட்டை வரலாற்றில் இது புதிய உச்சம் கொள்முதல் விலை 595 காசாக நிர்ணயம்

 முட்டை வரலாற்றில் இது புதிய உச்சம் கொள்முதல் விலை 595 காசாக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், கோழிப்பண்ணை வரலாற்றில் முதல்முறையாக, முட்டை கொள்முதல் விலை, 595 காசாக நிர்ணயம் செய்யப்பட்டு, புதிய உச்சத்தை எட்டி உள்ளது. நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, தினமும் ஆறு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டை கொள் முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவான, 'நெக்' நிர்ணயம் செய்கிறது. கடந்த 2024 டிச., 9ல், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 590 காசாக இருந்தது. இதுவே, முட்டை வரலாற்றில் உச்சபட்ச விலையாகவும் இருந்தது. இதையடுத்து, முட்டை விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. கடந்த 1ல், 540 காசாக கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 5ம் தேதி முதல், தினமும், 5 காசு வீதம் உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம், 590 காசாக நிர்ணயம் செய்யப்பட்டு, 2024 டிச., 9ல் நிர்ணயம் செய்த உச்சபட்ச விலையை, இரண்டாம் முறையாக தொட்டது. நேற்று, 'நெக்' மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், முட்டை கொள்முதல் விலையை, மேலும், 5 காசு உயர்த்தி, 595 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கோழிப்பண்ணை வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முட்டையின் கொள்முதல் விலை, 595 காசாக நிர்ணயம் செய்யப்பட்டு, புதிய உச்சத்தை எட்டியது. நாமக்கல்லில் நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், 1 கிலோ முட்டைக்கோழி, 112 ரூபாய், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ கறிக்கோழி, 104 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி