உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பயிர் காப்பீடு செய்ய இன்று கடைசி வாய்ப்பு

பயிர் காப்பீடு செய்ய இன்று கடைசி வாய்ப்பு

சேந்தமங்கலம், சேந்தமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மலர்க்கொடி வெளியிட்ட அறிக்கை:சேந்தமங்கலம் வட்டாரத்தில், 2025 -- 26ம் ஆண்டுக்கான காரி பருவத்தில் பாசிப்பயறு, நிலக்கடலை, சோளம், பருத்தி பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். இந்த திட்டம் இன்றுடன் நிறைவடைகிறது. இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வட்டார வேளாண்மை மையத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !