டிட்வா புயலால் கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்துள்ள கொல்லிமலை, சிறந்த சுற்றுலா தல-மாக விளங்குகிறது. இந்த மலைக்கு சென்றடைய, அடிவார பகுதி-யான காரவள்ளியில் இருந்து, 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவில் இருந்து, ஞாயிறு காலை வரை தொடர்ந்து டூவீலர், கார் போன்ற வாகனங்களில், சுற்றுலா பயணிகள் கொல்லிமலை நோக்கி படையெடுத்த வண்ணம் இருப்பர். சில நாட்களாக, 'டிட்வா' புயல் தாக்கத்தால் தமிழகம் முழு-வதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சேந்தமங்கலம் பகு-தியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை, அடுத்த நாள் சனிக்கிழமை இரவு வரை தொடர்ந்து பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கொல்லிமலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தொடர் மழை, கடும் பனிப்பொழிவு காரணமாக, நேற்று சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து காணப்பட்டது.