உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சரக்கு வாகனம் மரத்தில் மோதி வியாபாரி பலி

சரக்கு வாகனம் மரத்தில் மோதி வியாபாரி பலி

நாமக்கல், சேலம் மாவட்டம், தாரமங்கலத்தை சேர்ந்தவர் தங்கவேல், 67. வாழைக்காய் வியாபாரி. நேற்று இவர் சரக்கு வாகனத்தில், வாழைக்காய் வாங்குவதற்காக நாமக்கல் மாவட்டம் மோகனுார் வந்தார். வாகனத்தை டிரைவர் பார்த்தசாரதி என்பவர் ஓட்டி வந்தார். மோகனுாரில் வாழைக்காய் பாரம் ஏற்றிக் கொண்டு, இருவரும் சேலம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். மதியம், 3:00 மணிக்கு முதலைப்பட்டி பகுதியில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி, சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.இதில் இடதுபுறமாக அமர்ந்து பயணம் செய்த தங்கவேல் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். டிரைவர் பார்த்தசாரதி காயமின்றி உயிர் தப்பினார். நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ