உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.கோட்டில் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி

தி.கோட்டில் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி

திருச்செங்கோடு :திருச்செங்கோடு சுற்றுப்பகுதியில், நேற்று மாலை, 4:30 மணி அளவில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலைகளில் வழிந்து ஓடியது. புது பஸ் ஸ்டாண்ட் தினசரி மார்க்கெட், பழைய பஸ் பஸ் ஸ்டாண்ட், தெப்பகுளம், சங்ககிரி ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடைபட்டது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ், லாரி, கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் சாலையில் ஓடிய வெள்ளநீரில் சிக்கின. இதனால் திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு, நாமக்கல், ராசிபுரம், சேலம், சங்ககிரி, பரமத்தி வேலுார் வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.போலீசாார் பாதுகாப்பு பணிக்கு வெளி மாவட்டங்களுக்கு சென்று விட்டனர். போக்குவரத்து போலீசார் ஒருவர் கூட பணியில் இல்லாத காரணத்தால் போக்குவரத்து சீர்செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. நேற்று மாலை, 5:00 மணி முதல், 9:00 மணி வரை போக்குரவத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை