உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பட்டாசு லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பட்டாசு லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

நாமக்கல்: பட்டாசு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிவகாசியில் இருந்து, ஜார்கண்ட் மாநிலத்திற்கு, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு, லாரி ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. ராசிபுரம் அருகே ஏ.கே.சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட, மூணு சாவடி பகுதியருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததால் வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டது. புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையில் போலீசார் மற்றும் ராசிபுரம் தீயணைப்பு துறை வீரர்கள், பட்டாசு லாரியால் விபத்து ஏற்படாத வகையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். லாரியில் இருந்த பட்டாசுகளை, கிரேன் உதவியுடன் கீழே இறக்கி லாரியை துாக்கி நிறுத்தினர். அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.மீட்பு பணியால் நாமக்கல் சேலம் வழித்தடத்தில், தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை