மேலும் செய்திகள்
கொல்லிமலையில் மிளகு உற்பத்திக்கான பயிற்சி முகாம்
11-Oct-2024
கொல்லிமலையில் காபி விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்சேந்தமங்கலம், அக். 19-நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், 1,000 ஏக்கரில் காபி பயிரிடப்பட்டுள்ளது. காபி பயிர்களை பராமரிப்பது குறித்த ஆலோசனை வழங்குவதற்காக, காபி வாரியம் செயல்பட்டு வருகிறது. வாரியத்தின் மூலம் மலையில் காபி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு காபி விதைகள், இடு பொருள்கள், நோய் தடுப்பு மருந்துகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கொல்லி மலையில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால், காபி செடிகளில் நோய் தாக்காமல் தடுப்பது குறித்தும், பராமரிப்பு செய்வது குறித்தும் செம்மேட்டில் உள்ள காபி தோட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. பஞ்., தலைவர் நாகலிங்கம் தலைமை வகித்தார். இதில் காபி வாரிய இயக்குனர் சக்திவேல், காபி செடிகளில் நோய் தாக்கம் தடுப்பது குறித்து விளக்கம் அளித்தார். துணை தலைவர் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
11-Oct-2024