இயற்கை உரம் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி
ராசிபுரம், இயற்கை உரம் தயாரிக்க, விவசாயிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ராசிபுரத்தில், வீ த லீடர்ஸ் தனியார் அமைப்பு இயற்கை விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில், விவசாயிகள் இயற்கை உரம் தயாரிக்க ஒரு நாள் பயிற்சி வழங்கவுள்ளது. பல தானியம் விதைப்பு, பீஜாமிர்தம், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், மீன் அமிலம், பஞ்சகாவ்யம், பழக்காடி, வேப்பங்கொட்டை வெள்ளைப்பூண்டு கரைசல், 3ஜி வேப்பங்கொட்டை கரைசல், பத்திலை கசாயம், அக்னி அஸ்திரம், புளித்த மோர் கரைசல், தேமோர் கரைசல், ஜீவாமிர்தத்துடன் புளித்தமோர் கரைசல், திராட்சை ரசம் உள்ளிட்ட, 14 வகையான இயற்கை இடு பொருட்களை தயாரிக்க செய்முறை பயிற்சி வழங்கப்படுகிறது. வரும், 27ம் தேதி ராசிபுரம் சேந்தமங்கலம் பிரிவு அருகே, பச்சபாளி ரோட்டில் உள்ள முனிஷிப் தோட்டத்தில் பயிற்சி நடக்கிறது.