உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி

எலச்சிபாளையம், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், எலச்சிபாளையம் வட்டார வளமையத்தில், நேற்று, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கநிலை, 'இல்லம் தேடி கல்வி' தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. வட்டார கல்வி அலுவலர் அருள்புனிதன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகாலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னறி தேர்வு நடத்தி, மாணவர்களின் கற்றல் நிலைக்கேற்ப திறன்களை மேம்படுத்தி பயிற்சியளிக்கப்பட்டது.மேலும், தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் அடிப்படை திறன்களை மேம்படுத்துதல், கற்றல் விளைவுகளை தனி இணைக்குழு செயல்பாடுகளை ஊக்குவித்தல், அடைவுத்திறன் அட்டவணை பயன்படுத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன. எலச்சிபாளையம் ஒன்றியத்திலிருந்து, 11 தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். ஆசிரியர் பயிற்றுனர் சுதா கருத்தாளராக பயிற்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை