உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாணவர்களுக்கு சமூக மாற்றத்திற்கான பயிற்சி

மாணவர்களுக்கு சமூக மாற்றத்திற்கான பயிற்சி

ப.வேலுார், ப.வேலுார் தனியார் பள்ளியில், ஜே.சி., வெலுார் ராயல்ஸ் மற்றும் ஜே.சி., இந்தியா மண்டலம்-29 இணைந்து நடத்திய, 'நெக்சஸ்-2025, தி ட்ரெய்னிங் கார்னிவல்' துவக்க விழா மற்றும் மாணவர்களுக்கு சமூக மாற்றத்திற்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.ஜே.சி., மண்டல இயக்குனர் மணிவண்ணன், இளம் தலைமுறைக்கு எதிர்கால மாற்றத்தை உருவாக்கும் தலைமைத்துவம் மற்றும் திறன் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தொடர்ந்து, மாணவர்களுக்கான சமூக மாற்றத்துக்கான பயிற்சி அளித்தார். மண்டல துணை தலைவர்கள் நவீன், ரேவந்த்சிதார்த், மண்டல இயக்குனர் ரபிக் அஹ்மத் மற்றும் மண்டல அலுவலர் ஷகீலா பானு ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி