மேலும் செய்திகள்
ஆசிரியர் இடமாறுதலுக்கு லட்சம் பேர் விண்ணப்பம்
27-Jun-2025
நாமக்கல்,நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. அதன்படி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் இடமாறுதல் அளிக்கும் கலந்தாய்வு நேற்று நடந்தது. தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்கள் காண்பிக்கப்பட்டன.அவற்றில் தங்களுக்கு விருப்பமான இடங்களை முன்னுரிமை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்தனர். மொத்தம், 39 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி வழங்கினார்.
27-Jun-2025