நுாறு நாள் பணியாளரை விவசாய பணிக்கு மாற்றணும்: குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
நாமக்கல்: 'நுாறு நாள் திட்ட பணியாளர்களை விவசாய பணிக்கு மடை-மாற்றம் செய்ய வேண்டும்' என, குறைதீர் கூட்டத்தில் விவசா-யிகள் கோரிக்கை விடுத்தனர்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.தொடர்ந்து நடந்த விவாதம் பின்வருமாறு:மெய்ஞானமூர்த்தி, விவசாயி: தற்போது, நிலக்கடலை அறுவடை காலமாக உள்ளது. ஆனால், ஆள் பற்றாக்குறையால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு, நுாறு நாள் திட்ட வேலையாட்களை, விவசாய பணிக்கு மடைமாற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், 50 சதவீதம் கூலியை வழங்குகிறோம்.சுந்தரம், நிர்வாகி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டப்பணியாளர்கள், ஏரி, குட்டைகளில் அமர்ந்துள்ளனர். அதனால், விவசாய பணிக்கு கூலி ஆட்கள் கிடைக்காமல் அப்பணி பாதிக்கப்படுகிறது. பல ஆயிரம் ரூபாய் செலவு செய்த விவசாயி, அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காமல் அவதிப்படுகிறார். அதனால், அறுவடை காலங்-களில், 100 நாள் வேலை திட்டப்பணிக்கு ஆட்களை அழைக்-காமல், ஓய்வு நேரத்தில் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.பெருமாள், விவசாயி: மாவட்டத்தில் சீமக்கருவேல மரங்கள் அதி-களவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அவற்றை பஞ்., மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது விவசாயிகளே அகற்ற முன்வர வேண்டும்.கரும்பு டன் ஒன்றுக்கு, ஹரியானாவில், 3,900 ரூபாய், உத்தரபிர-தேசத்தில், 3,700 ரூபாய், பஞ்சாபில், 3,800 ரூபாய் வழங்குகின்-றனர்.ஆனால், தமிழகத்தில், டன் ஒன்றுக்கு, 3,157 ரூபாய் வழங்கப்படு-கிறது. குறிப்பிட்ட காலத்தில் கரும்பை வெட்டாமல், காலம் தாழ்த்தி வெட்டுவதால், விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்ப-டுகிறது. அதனால், தேர்தல் நேரத்தில் அறிவித்த, டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் விலையை, தமிழக அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு விவாதம் தொடர்ந்தது.