உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சிறுவனிடம் பையை பறித்த திருச்சி வாலிபருக்கு காப்பு

சிறுவனிடம் பையை பறித்த திருச்சி வாலிபருக்கு காப்பு

மோகனுார், நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து மோகனுார் நோக்கி, '16ஜி' என்ற அரசு டவுன் பஸ், நேற்று காலை, 7:00 மணிக்கு, மோகனுார் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தது. இதில், துாசூரை சேர்ந்த சிவஞானம், 53, என்பவர் கண்டக்டராகவும், தெய்வராசு என்பவர் டிரைவராகவும் பணியாற்றினர். பஸ் படிக்கட்டில் ஒரு வாலிபர் உட்கார்ந்து கொண்டு, பஸ்சில் வந்த ஒரு சிறுவனின் பையை பறித்துக்கொண்டு தராமல் இருந்துள்ளார்.மேலும், பஸ்சில் இருந்தும் இறங்க மறுத்துள்ளார். இதுகுறித்து, பஸ் கண்டக்டர் மோகனுார் போலீசில் புகாரளித்தார். விசாரணையில், திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, பிள்ளாதுரையை சேர்ந்த மணிபாரதி, 26, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !