உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.35 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை

ரூ.35 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை

ராசிபுரம், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், நாமகிரிப்பேட்டை ஏல மையத்தில், வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் ஏலம் நடக்கிறது. அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில், விரலி ரகம், 360 மூட்டை, உருண்டை ரகம், 110 மூட்டை, பனங்காளி, 10 மூட்டை என மொத்தம், 480 மூட்டை மஞ்சள் கொண்டுவரப்பட்டது.அதில், விரலி ரகம் குறைந்த பட்சம் குவிண்டால், 10,012 ரூபாய், அதிகபட்சம், 14,699 ரூபாய், உருண்டை ரகம், 9,002 ரூபாய், அதிகபட்சம், 12,942 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல், பனங்காளி ரகம், குவிண்டால், 6,569 ரூபாய், அதிகபட்சம், 29,888 ரூபாய் என, 480 மூட்டை மஞ்கள், 35 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை