ரூ.640 கோடி மோசடி இரு ஆடிட்டர்கள் கைது
புதுடில்லி : பொது மக்களிடம் இருந்து பல்வேறு குறுக்கு வழிகளில் 640 கோடி ரூபாய் சுருட்டி மோசடியில் ஈடுபட்ட வழக்கில், அந்த பணத்தை கைமாற்ற உதவிய சி.ஏ., எனப்படும் பட்டய கணக்கா-ளர்கள் மற்றும் கிரிப்டோகரன்சி வர்த்தகரை அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது.பொதுமக்களிடம் இருந்து, 'ஆன்லைன்' மூலம் நடந்த, 640 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக, இரு வழக்குகளை டில்லி பொருளா-தார குற்றப்பிரிவு பதிவு செய்தது. பெட்டிங், சூதாட்டம், பகுதி நேர வேலை உட்பட பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி, மக்க-ளிடம் இருந்து பணம் பறிக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்-ளது. இந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிந்து விசாரித்தது. கடந்த மாதம், 28 முதல் 30 வரை டில்லி, குருகிராம், ஜோத்பூர், ஹைதராபாத், புனே, கோல்கட்டா உட்பட 13 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.இதில் 47 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம், 1.3 கோடி ரூபாய் மதிப்பிலான கிரிப்டோகரன்சி ஆகியவை பறிமுதல் செய்-யப்பட்டன. மேலும், இந்த மோசடி பணத்தை வெள்ளையாக மாற்ற உதவிய-தாக ஆடிட்டர்கள் அஜய் யாதவ், விபின் யாதவ் மற்றும் கிரிப்-டோகரன்சி வர்த்தகர் ஜிதேந்திர கஸ்வான் ஆகியோர் கைது செய்-யப்பட்டனர்.