பரமத்தி அருகே டூவீலர் திருட்டு
ப.வேலுார் கோவை மாவட்டம், கவுந்தப்பாடி அருகே, இடையார்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் மகன் ஆகாஷ், 26; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த, 9ல் பரமத்தி அருகே, புலவர் பாளையத்தில் உள்ள தான் வேலை பார்க்கும் தனியார் நிறுவனம் முன், தன் டூவீலரை நிறுத்தி விட்டு, அலுவலக வேலையாக சென்னை சென்றார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது டூவீலரை காணவில்லை. இதுகுறித்து பரமத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.