இரவில் டூவீலர் திருட்டு டிப்டாப் வாலிபர் கைவரிசை
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, காவிரி அடுத்த அன்னை சத்யா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு -உள்ளது. இப்பகுதியை சேர்ந்-தவர் செல்வம், 50; விசைத்தறி தொழிலாளி. இவர், நேற்று முன்-தினம் இரவு, வீட்டின் முன், 'ஸ்பிளண்டர் பிளஸ்' டூவீலரை நிறுத்தி வைத்திருந்தார். காலையில் வந்து பார்த்தபோது டூவீலரை காணவில்லை. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, நள்ளிரவு நேரத்தில் சட்டை, பேண்ட் அணிந்தபடி வந்த, 'டிப்டாப்' வாலிபர், டூவீலரை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகார்படி, பள்ளிப்பாளையம் போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவு-களை வைத்து விசாரித்து வருகின்றனர்.