உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி

ராசிபுரம், அக். 11-ராசிபுரத்தில், நேற்று முன்தினம் இரவு இரண்டு டூவீலர்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.ராசிபுரம் அடுத்த பட்டணத்தை சேர்ந்தவர் பூபாலன், 29. இவர் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் தனது பஜாஜ் பல்சர் வாகனத்தில், சேலத்தில் இருந்து பட்டணத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்யும், தொட்டியமத்தை சேர்ந்த சுகுமாரன், 31, தனது ஸ்பிளண்டர் பைக்கில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.ராசிபுரம் அடுத்த ஏ.டி.சி., டெப்போ அருகே, இரு பைக்குகளும் நேருக்கு நேர் மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட பூபாலன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த சுகுமாரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் விபத்து குறித்த, 'சிசிடிவி' கேமரா பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை