உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம் உழவர் சந்தையில் காய்கறி விலை சரிவு

ராசிபுரம் உழவர் சந்தையில் காய்கறி விலை சரிவு

ராசிபுரம்: ராசிபுரம் உழவர் சந்தையில், நேற்று தக்காளி கிலோ, 23, கத்தரி, 32, வெண்டை, 35, புடலை, 40, பீர்க்கன், 35, பாகல், 40, சுரைக்காய், 12, பச்சை மிளகாய், 35, முருங்கை, 140, சின்ன வெங்காயம், 60, பெரிய வெங்காயம், 45, முட்டைகோஸ், 20, கேரட், 65, பீன்ஸ், 45, பீட்ரூட், 40 ரூபாய்க்கு விற்பனையானது. வாழைப்பழம், 40, கொய்யா, 50, பப்பாளி, 30, தர்பூசணி, 18, எலுமிச்சை, 30, விலாம்பழம், 40 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று ஒரே நாளில், 244 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்க கொண்டு வந்திருந்தனர். 23,465 கிலோ காய்கறி, 7,615 கிலோ பழங்கள், 415 கிலோ பூக்கள் என மொத்தம், 31,495 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு, 12.52 லட்சம் ரூபாய் ஆகும். 5,837 பேர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர். கடந்த வாரத்தை விட, பந்தல் காய்கறிகள் விலை கிலோவுக்கு, 10 முதல், 15 ரூபாய் வரை குறைந்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ