உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மல்லசமுத்திரத்தில் வாகன தணிக்கை

மல்லசமுத்திரத்தில் வாகன தணிக்கை

மல்லசமுத்திரம், திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில், நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டார். இதில், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், மொபைல்போன் பேசியபடி சென்றவர்களின் வாகனத்தை நிறுத்தி, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இருசக்கர வாகனங்களை ஓட்டிவந்த சிறுவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்டினுள் செல்லாமல், சாலையிலேயே பயணிகளை ஏற்றி, இறக்கி சென்ற பஸ் ஓட்டுனர்களிடம், அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று வர வேண்டும் என அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை