மஹாராஷ்டிராவில் வெற்றி: பா.ஜ., கொண்டாட்டம்
மஹாராஷ்டிராவில் வெற்றி: பா.ஜ., கொண்டாட்டம்நாமக்கல், நவ. 24-மஹாராஷ்டிரா மாநிலத்தில், சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன. தொடக்கம் முதல், பா.ஜ., கூட்டணி முன்னிலை பெற்று வந்தது. இறுதியில், அதிக இடங்களில் கைப்பற்றி, மீண்டும் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும், பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி, நாமக்கல் மணிக்கூண்டில், நகர பா.ஜ., சார்பில், தேர்தல் வெற்றி கொண்டாடப்பட்டது. நகர தலைவர் சரவணன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், கிழக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் சத்தியாபானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.