மேலும் செய்திகள்
சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
02-Jul-2025
நாமக்கல், தமிழக கிராம சுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சாந்தா மணி தலைமை வகித்தார். செயலாளர் கற்பகம், பொருளாளர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் முருகேசன் கண்டன உரையாற்றினார். இதில், தடுப்பூசி பணிகளை தனியார் மயமாக்கும் தமிழக அரசின் முடிவை திரும்ப பெற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.கிராம சுகாதார செவிலியர்களின் காலி துணை மைய பணியிடங்களை எந்த நிபந்தனையும் இன்றி, நிரப்ப வேண்டும். அப்பணியிடங்களில், பயிற்சி பெற்று பணிக்காக காத்திருக்கும் கிராம சுகாதார செவிலியர்களை பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், துணை தலைவர் இளவேந்தன், முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் சங்க மாநில நிர்வாகி இளங்கோவன் உள்பட, செவிலியர்கள் பலர் பங்கேற்றனர்.
02-Jul-2025