உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், மானத்தி கிராம மக்களுக்கு, 100 நாள் வேலை வழங்கக்கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். அதில், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், மானத்தி ஊராட்சியில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு, தொடர்ந்து, 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கேஷம் எழுப்பினர். தொடர்ந்து, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை