மேலும் செய்திகள்
கும்பாபிேஷக விழாவுக்கு 124 கலசங்கள் ஊர்வலம்
22-Oct-2025
மோகனுார், -மோகனுார், காளிபாளையத்தில் உள்ள சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபஷேக விழாவையொட்டி, நேற்று முன்தினம் அதிகாலை, 4:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, மகா கணபதி யாகம், மகாலட்சுமி யாகம், நவகிரக யாகம், பூர்ணாஹீதி நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். நேற்று காலை, 4:30 மணிக்கு சுவாமிக்கு காப்பு கட்டி இரண்டாம் கால யாக வேள்வி, நாடி சந்தானம், யாத்திரா தானம் நடந்தது. தொடர்ந்து புனித நீர்கலசங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோவில் கோபுரத்தில் பொருத்தப்பட்ட கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
22-Oct-2025