உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மலேசியா பல்கலையுடன் ஒப்பந்தம்

விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மலேசியா பல்கலையுடன் ஒப்பந்தம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள், மலேசி-யாவின் ஆசிய பசிபிக் தொழில் நுட்ப மற்றும் புதுமை பல்கலை-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்-பந்தத்தில், விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் துனைத்தலைவர் கிருபாநிதி மற்றும் ஆசிய பசிபிக் தொழில்நுட்ப மற்றும் புதுமை பல்கலையின் இணைவேந்தர் முரளிராமன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் சேர்மன் கருணாநிதி பேசுகையில், ''இந்தியாவிற்கும், மலேசியாவிற்கும் இடையிலான கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், உலகளாவிய கற்றல், மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்ற திட்டங்கள், செயற்கை நுண்ணறிவு தரவு அறிவியல், உயிரி தொழில்நுட்பம் மற்றும் வணிக பகுப்பாய்வு உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள் சர்வதேச மாநாடுகள், கருத்தரங்-குகள் மற்றும் பட்டறைகள் ஏற்பாடு செய்தல், கலாசார கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் கூட்டு வெளியீடுகள் மற்றும் புதுமை திட்டங்கள் ஆகியவற்றில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கவனம் செலுத்த இருக்கிறது,'' என்றார்.நிர்வாக இயக்குனர் குப்புசாமி, ஆராய்ச்சி இயக்குனர் பாலகுரு-நாதன், விவேகானந்தா தகவல் மற்றும் மேலா ண்மை ஆய்வுகள் நிறுவன இயக்குநர் மோகனசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை