மேலும் செய்திகள்
மின்னணு ஓட்டுபதிவு இயந்திரம் செயல் விளக்கம்
23-Jan-2026
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் ஓட்டுப்பதிவு இயந்-திரம் செயல்முறை குறித்து நடமாடும் வாகனம் மூலம் பொதுமக்-களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.வரும், 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் எப்-படி ஓட்டு போடுவது என்பது குறித்து, பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கையா-ளுதல் குறித்து, நடமாடும் விழிப்புணர்வு வாகனம் மூலம் செயல்-முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.அதில், ஓட்டளிக்கும் முறை, வாக்காளர் செலுத்திய ஓட்டுகளை உறுதிப்படுத்தும் கருவியின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்தனர். ஏராளமான பொதுமக்கள் செயல்முறை விளக்-கத்தை கண்டறிந்தனர்.
23-Jan-2026