உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விவிபேட் இயந்திரம் கலெக்டர் ஆய்வு

விவிபேட் இயந்திரம் கலெக்டர் ஆய்வு

நாமக்கல், பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து, ஓட்டுப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்படும், 200, 'விவிபேட்' இயந்திரங்கள், நேற்று நாமக்கல் வந்தடைந்தன. இக்கருவி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்படும் ஒரு பாகமாகும். இதில், வாக்காளர்கள் தாங்கள் பதிவு செய்த ஓட்டை, ஆறு வினாடிகள் சரிபார்த்துக்கொள்ளலாம். பெங்களூரில் இருந்து வந்த கருவிகளை கலெக்டர் துர்கா மூர்த்தி அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்தார். கருவிகளின் எண்ணிக்கையை சரிபார்த்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி