உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருமண விசேஷத்திற்கு வந்தவர்கள் மோதல்

திருமண விசேஷத்திற்கு வந்தவர்கள் மோதல்

எருமப்பட்டி:எருமப்பட்டி அருகே, மகாதேவில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இதற்காக மணமகன் வீட்டார், 30க்கும் மேற்பட்டோர் தனியார் பஸ்சில் மகாதேவிக்கு வந்துள்ளனர். பின், திருமணம் முடிந்து மணமகன் வீட்டார், பஸ்சில் சென்றுகொண்டிருந்தபோது உறவினர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, பவித்திரத்தில் டீ குடிப்பதற்காக பஸ்சை நிறுத்தியுள்ளனர். அப்போது, பஸ்சில் இருந்தவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்ப்பட்டுளளது. இதனால் பவித்திரத்தை சேர்ந்த சிலர் ஏன் தகராறு செய்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அப்போது, இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதல் அடிதடியாக மாறியது. இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி