ராணுவ வீரருக்கு வரவேற்பு
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, கருங்கல்பட்டி அக்ரஹாரம் கிராமம், அண்ணாநகரை சேர்ந்தவர்கள் பூவாடன், 85, குஞ்சம்மாள், 80, தம்-பதியர். இவர்களது, 4வது மகன் முத்துசாமி, 48. கடந்த, 2000 நவ., 8ல் இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். ஜம்மு-காஷ்மீர், அருணாச்சலபிரதேசம், மும்பை, கோல்கட்டா, உத்தரபிரதேசம், பஞ்சாப், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்றினார். இந்-நிலையில், கடந்த நவ., 30ல் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். நேற்று சொந்த ஊருக்கு திரும்பிய ராணுவ வீரருக்கு, ஊர்பொது-மக்கள் சார்பில் மேள, தாளத்துடன் மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். இவருக்கு, ராஜேஸ்வரி, 41, என்ற மகளும், வைஷ்ணவி, 17, என்ற மகளும் உள்ளனர்.