இணைய தொழிலாளர்களுக்கான நலவாரிய சிறப்பு பதிவு முகாம்
நாமக்கல்: நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) இந்தியா வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் மூலம், மாவட்டத்தில் இணையம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் பணியாளர்களை, அவர்கள் பணியாற்றும் அலுவலகத்திற்கே சென்று நலவாரிய உறுப்பினராக பதிவு செய்வதற்கான சிறப்பு பதிவு முகாம் இன்று முதல் 26 வரை நடைபெறுகிறது. ஸ்விக்கி, ஜொமோடோ, பிளிப்கார்ட், மீஷோ, அமேசான், இகார்ட் போன்றவற்றில் பணியாற்றுவோர் முகாமில் கலந்து கொள்ளலாம். தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதன் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், ஓய்வூதியம் போன்ற பலன்களை பெற்று பயனடையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.