வன உயிரின வாரவிழா விழிப்புணர்வு போட்டி
நாமக்கல்: வன உயிரின வார விழாவையொட்டி, நாமக்கல்லில் நடந்த விழிப்புணர்வு போட்டிகளில், மாவட்டம் முழுவதும் இருந்து, 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்-கேற்றனர்.மாவட்ட வனத்துறை சார்பில், வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட வன அலுவலர் கலாநிதி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் (பொறுப்பு) விஜயன், மரகதம், ரவிசெல்வம், பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிய-ருக்கு, ஓவியம், பேச்சு, கட்டுரை, வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டது. அதில், மாவட்டம் முழுவதும் இருந்து, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.குறிப்பாக ஓவிய போட்டியில், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரி-னங்கள் குறித்த ஓவியங்களை, மாணவ, மாணவியர் ஆர்வமுடன் வரைந்து, தங்களது திறமைகளை நிரூபித்தனர்.மேலும், தமிழ் மற்றும் ஆங்கில வழியில், நமது அன்றாட வாழ்வில் காலநிலை மாற்றத்தை தணிப்பதற்கான வழிகள், தமி-ழக மரங்களின் முக்கியத்துவம் உள்ளிட்ட பேச்சுப் போட்டிக-ளிலும், மாணவர்கள் பங்கேற்றனர்.நாமக்கல் வனச்சரகர் பழனிசாமி, வனத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.* ராசிபுரம் அடுத்த தனியார் கல்லூரி மற்றும் நாமக்கல் தேசிய பசுமை படை இணைந்து உலக வன வார விழிப்புணர்வு நிகழ்ச்-சியை நடத்தின. இதையொட்டி, ஓவியப்போட்டி, ரங்கோலி கோலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அழகு போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.மேலும் பறவைகள் கண்காட்சி, நத்தை மற்றும் வண்ண மீன்கள் வளர்ப்பு, வெள்ளை நிற அழகு எலிகள், வெளிநாட்டு வண்ண பூனைகள், பேசும் பறவைகள் உள்ளிட்ட கண்காட்சிகள் இடம் பெற்றன.கல்லுாரி முதல்வர் விஜயகுமார், ஷபானா பேகம், விலங்கியல் துறை தலைவர் சுகன்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாமக்கல் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பித்தார்.