மேலும் செய்திகள்
சேதம் அடைந்த தடுப்பு சுவரால் விபத்து அபாயம்
15-Oct-2024
மலைப்பாதை சாலையில்தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?வெண்ணந்துார், நவ. 7-வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட அண்ணாமலைபட்டி, நெ.3.கொமராபாளையம் ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இந்த மலை கிராமத்திற்கு, ராசிபுரம் - ஆட்டையாம்பட்டி நெடுஞ்சாலை, தச்சன்காடு பகுதியில் இருந்து, 3 கொண்டை ஊசி வளைவுகளுடன் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுகிறது. இதனால், சாலையோர தடுப்புச்சுவர்கள் சாலையின் மட்டத்துக்கு வந்து விட்டன. தற்போது ஏராளமானோர் டூவீலர், கார்களில் வத்தல் மலைக்கு சென்று வருகின்றனர். சாலையோரம் தடுப்பு சுவர் இல்லாததால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையில் பயணிக்கின்றனர். எனவே, இந்த மலைப்பாதையில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15-Oct-2024