எக்ஸல் வணிகவியல் கல்லுாரியில் மகளிர் கையுந்து பந்து போட்டி
குமாரபாளையம், ஜன. 4-குமாரபாளையம் எக்ஸல் வணிகவியல், அறிவியல் கல்லுாரியில், பெரியார் பல்கலை அளவில் மகளிர் கையுந்து பந்து போட்டி நடந்தது. எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் நடேசன், துணைத்தலைவர் மதன்கார்த்திக், எக்ஸல் பப்ளிக் பள்ளி இயக்குனர் கவியரசி, செயல் இயக்குனர் பொம்மண்ணராஜா, எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குனர் செங்கோட்டையன் ஆகியோர் தலைமை வகித்தனர்.எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் விமல் நிஷாந், புலன் முதன்மையர்கள் சுப்ரமணியம், மஞ்சுளா, உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் விமல் நிஷாந் வரவேற்றார்.வெற்றி பெற்ற மாணவியருக்கு, பெரியார் பல்கலை உடற்கல்வித்துறை இயக்குனர் வெங்கடாஜலம், சேலம் ஏ.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி ஆண்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர், சுரேஷ்குமார், நாமக்கல் என்.கே.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி பெண்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர், கோபிகா ஆகியோர், வெற்றி பெற்ற அணியினருக்கு சான்றிதழ், கேடயங்களை வழங்கினர். உடற்கல்வித்துறை ஆசிரியர் விவேகானந்தன் நன்றி கூறினார்.