உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாலையில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி தொழிலாளி பலி

சாலையில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி தொழிலாளி பலி

குமாரபாளையம், சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, ஆர்.சி., ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ், 48; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை, 3:30 மணிக்கு, குமாரபாளையம் அருகே, அருவங்காடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். சேலம்-கோவை புறவழிச்சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த, 'கவாசாகி' டூவீலர், இருதயராஜ் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், இருதயராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்துக்கு காரணமான, டூவீலர் ஓட்டிவந்த, தர்மபுரியை சேர்ந்த கோகுல், 25, என்பவருக்கும் பலத்த அடிபட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை