உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

ப.வேலுார், ஜேடர்பாளையம் அருகே கொத்தமங்கலம், அரசம்பாளையம் பகுதியை சேர்ந்த சின்னுசாமி 55, கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை, சொந்த வேலையாக ஜேடர்பாளையம் சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில், சோழசிராமணி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.கொத்தமங்கலம் தபால் நிலையம் அருகே சென்ற சின்னுசாமி, முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி பஸ்சை முந்திச் சென்று, திடீரென இடது பக்கத்தில் திரும்பியுள்ளார். அப்போது பின்னால் வந்த தனியார் பள்ளி பஸ், அவர் மீது மோதியுள்ளது. இதில் சின்னுசாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ