உலக தடகளம்: அனிமேஷ் தகுதி
புதுடில்லி, உலக தடகளத்தில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்திய ஓட்டப்பந்தய வீரர் என்ற சாதனை படைத்தார் அனிமேஷ்.உலக தடகள சாம்பியன்ஷிப் வரும் செப். 13-21ல் ஜப்பானின் டோக்கியோவில் நடக்க உள்ளது. இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, நடப்பு சாம்பியன் அடிப்படையில் தகுதி பெற்றார். தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் (டிரிபிள் ஜம்ப்), குல்வீர் சிங் (5000 மீ.,), பாருல் சவுத்ரி (3000 மீ., ஸ்டீபிள் சேஸ்), நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி, தகுதி பெற்றனர். தற்போது தரவரிசை அடிப்படையில் உலக தடகளத்தில் பங்கேற்கும் 13 பேர் கொண்ட இந்திய நட்சத்திரங்கள் பட்டியல் வெளியானது. ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் அனிமேஷ் குஜுர் 21, உலகத் தரவரிசையில் 1220 புள்ளியுடன், 41 வது இடம் பிடித்து, தகுதி பெற்றார். இதையடுத்து உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்திய ஓட்டப்பந்தய வீரர் என சாதனை படைத்தார் அனிமேஷ். தவிர, அன்னு ராணி (ஈட்டி எறிதல்), முரளி ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), சச்சின் யாதவ் (ஈட்டி எறிதல்) உட்பட மொத்தம் 19 பேர் கொண்ட இந்திய அணி, டோக்கியோ செல்ல உள்ளது.