உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உலக புத்தக நாள் விழா

உலக புத்தக நாள் விழா

ராசிபுரம்:ராசிபுரத்தில், தமிழ் கழகத்தின் சார்பாக உலக புத்தக நாள் விழா கொண்டாடப்பட்டது. தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி சிறப்பாளராக பங்கேற்று, புத்தகத்தின் வலிமை, மதிப்பு குறித்தும், புத்தகம் என்ன செய்யும் என்பதை விளக்கியும் பேசினார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகம் பரிசளிக்கப்பட்டது. வாசிப்பை நேசிப்போம், வாசிப்பை சுவாசிப்போம், புத்தகம் படிப்போம், புதிய எழுச்சி பெறுவோம், புதிய புறநானுாறு படைப்போம் என்ற முழக்கத்தோடு, உலக புத்தக தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ