உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உலக ஓசோன் பாதுகாப்பு தினம்; விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

உலக ஓசோன் பாதுகாப்பு தினம்; விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

நாமக்கல்: உலக ஓசோன் பாதுகாப்பு தினம், செப்., 16ல் கொண்டாடப்படுகிறது. ஓசோன் அடுக்கு பூமியை, சூரியனின் தீவிரமான புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்க முக்கிய பங்காற்றுகிறது. இதனால், உலகின் பல பகுதிகளில், முக்கியமாக சுற்றுச்சூழல் மற்றும் மனித உடல்நலம் மீது உள்ள பாதிப்பை குறைக்க உதவுகிறது.இதையொட்டி, விழிப்பணர்வு சைக்கிள் பேரணி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., சுமன் தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்தார். கலெக்டர் அலுவலகம் முன் துவங்கிய சைக்கிள் பேரணி, நாமக்கல் மாநகராட்சி, பஸ் ஸ்டாண்ட், பரமத்தி சாலை, கோட்டை சாலை வழியாக சென்று மீண்டும் துவங்கிய இடத்தில் முடிந்தது. மாவட்ட வன அலுவலர் கலாநிதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரகுநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ